• Home
  • தமிழ்நாடு
  • கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு

கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

Email :52

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், அரியூர் கிராமத்தில் எய்டு இந்தியா (AID INDIA) அமைப்பின் மூலம் மிகவும் பின்தங்கிய குடும்பகளுக்கு கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மிகவும் பின்தங்கிய 4 குடும்பங்களுக்கு யுரேகா வீடுகள் திட்டத்தின் கீழ் 1 வீடு 2.7 இலட்சம் வீதம்  சுமார் ரூபாய் 10.8 லட்சம் மதிப்பில் 4 குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது.

இன்று (20-09-2025) நான்கு வீட்டு பயனாளிகளுக்கும் வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த  நிகழ்வில் யுரேகா வீட்டுத்திட்ட மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுவாமிநாதன், மாநில ஒருங்கிணைப்பு குழு செல்வி.சங்கல்பா, திரு. விஷால் , புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா, திருச்சி

மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் / யுரேகா கிராம வளர்ச்சி குழு மாநிலத் திட்ட இயக்குனர் திரு.அவ. ராஜபாண்டியன், மாநிலத் திட்ட மேற்பார்வையாளர்கள் அருண் மற்றும் செந்தில், அரியூர் கிராம ஊராட்சி செயலர் திருமதி.சாந்தி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு. நிவாஸ், அரியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பாலமுருகன், அரியூர் கிராம பொறுப்பாளர்கள் திரு‌.நாகராஜன், திரு ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வினை திட்ட மேலாளர் நதியா ராஜபாண்டியன்,  ஒன்றிய கருத்தாளர் கயல்விழி, பிரதீபா, கரோலின் அரியூர் கிராம வளர்ச்சி குழு தலைவர் திலகவதி செயலாளர் தமிழ்ச்செல்வி, அமைப்பாளர் செல்வி  மற்றும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் அரியூர் கிராம யுரேகா ஆசிரியர்கள் திருமதி,ஷீபா, திருமதி கௌசல்யா, திருமதி சரண்யா, திருச்சி மாவட்ட யுரேகா கிராம வளர்ச்சி குழு தலைவர்கள்/பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், கருத்தாளர்கள், யுரேகா குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கிராம வளர்ச்சி குழு உறுப்பினர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts