கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று 30/04/2025 கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு அண்ட் பாண்டிச்சேரி உறுப்பினர் மற்றும் இணை தலைவர் திரு N.மாரப்பன், நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் மாண்புமிகு கரூர் மாவட்ட நீதிபதி R.சண்முகசுந்தரம் சென்னைக்கு மாறுதல் மற்றும் சக நீதிபதிகள் பணி மாறுதலுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசு வழங்கி வழி அனுப்பும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மாண்புமிகு முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி திரு P. தங்கவேல் மற்றும் நீதிபதிகள், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ,700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் விழாவில் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . விழாவிற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு N. மாரப்பன் அவர்கள் செய்திருந்தார்.













