
கொரோனா விடுமுறை காரணமாக விட்டுப் போன கல்வியை ஈடு செய்ய இல்லம் தேடிக் கல்வி திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டத்தில் பல லட்சம் தன்னார்வலர்கள் குறிப்பாக பெண்கள் மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வேம்பனூர் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் திருமதி வை. கல்பனா கணேசன் அவர்கள் 01/03/2025 அன்று மாலை முப்பெரும் விழாவை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மாண்புமிகு முதல்வர் பிறந்த நாள் விழா இல்லம் தேடிக் கல்வி ஆண்டு விழா சிறப்பாக நடத்தி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் போட்டி நடத்தி பரிசுகள் கொடுக்கப்பட்டது.

இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் திரு.சேதுராமன் ,திரு.ராமசாமி, திரு.வீராசாமி சமூக ஆர்வலர் திருமதி ரேவதி முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கினங்க
கல்வி சேவை குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்ற என்னுடைய சிறு வயது கனவு நனவாக்கிய தமிழக அரசிற்கும் மற்றும் இந்த மாணவர்களின் கற்றல் இடைவெளி சரி செய்யக் கொண்டு வரப்பட்ட இந்த வாய்ப்பில்

என்னைப் போன்ற பல லட்சம் பெண்களின் கற்றல் இடைவெளியை சரி செய்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் நன்றிகள் கூற கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றி.
















