• Home
  • தமிழ்நாடு
  • “வீட்டில் கரும்பலகை புதிய முயற்சி – சுயகற்றல்”
    16.01.2025.
தமிழ்நாடு

“வீட்டில் கரும்பலகை புதிய முயற்சி – சுயகற்றல்”
16.01.2025.

Email :274

“வீட்டில் கரும்பலகை புதிய முயற்சி – சுயகற்றல்”
16.01.2025.

ஆக்கம்:
திருமதி பார்வதி
தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  சேரன்மகாதேவி, சேரன்மகாதேவி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.

வீடு அடிப்படையிலான சுயகற்றல் என்பது குழந்தைகள் தங்கள் வீட்டு சூழலில் தன்னிச்சையாக கற்றுக்கொள்ள ஒரு பயனுள்ள செயற்பாடாகும். இது குழந்தைகள் தங்களது கற்றலை சுயமாக மேற்கொள்ள ஊக்குவித்து, எழுதுதல், வாசித்தல் மற்றும் அறிவுத் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

செயற்பாட்டின் விளக்கம்:
அமைப்பு:
வீட்டில் கருப்பலகை  போன்ற ஒரு இடத்தை அமைக்க வேண்டும்.

எழுதுவதற்கான Chalk piece அல்லது மார்க்கர் போன்ற பொருட்களை வழங்க வேண்டும்.

குழந்தைகளின் பங்கு:
குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில்  அந்த இடத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் கற்ற பாடங்கள், கணிதப் பிரச்சினைகள், புதிய சொற்கள், கதைகள் அல்லது வரைபடங்களை எழுதுகிறார்கள்.

பிற சகோதரங்கள் அல்லது அருகிலுள்ள குழந்தைகள் இதில் பங்கேற்று, பிழைகளை திருத்தவோ அல்லது புதிய தகவல்களை சேர்க்கவோ உதவுகிறார்கள்.

இது கலந்துரையாடல்  சூழலை உருவாக்குகிறது.

நன்மைகள்:

எழுத்துத் திறன் மேம்பாடு:
தொடர்ந்து எழுதுவதால் கையெழுத்து, எழுத்துப்பிழை சரிசெய்தல், மற்றும் வாக்கிய அமைப்பு ஆகியவை மேம்படுகின்றன.

நம்பிக்கை வளர்ச்சி: தங்கள் கற்றலின் விளைவுகளை வெளிப்படுத்துவதால் குழந்தைகளுக்கு பெருமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

படைத்திறன் ஊக்குவிப்பு: குழந்தைகள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக எழுதவோ அல்லது வரைந்தோ வெளிப்படுத்த முடியும்.

குழந்தைகள் தங்களது அறிவைப் பகிர்ந்து, பிழைகளை திருத்தி ஒருவருக்கொருவர் கற்றுத் தருகிறார்கள்.

அவர்கள் கற்றவற்றை எழுதுவதால் தகவலை நன்கு நினைவில் கொள்ள முடியும்.

பெற்றோரின் பங்கு:
பெற்றோர்கள் கரும்பலகையில் குழந்தைகள்
கவிதைகள், புதிர்கள், அல்லது சுவாரஸ்யமான தகவல்களை எழுத ஊக்குவிக்க வேண்டும்.

இச்செயற்பாடு குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களிலும் பயனுள்ள மற்றும் சுயமாக கற்றுக்கொள்ளும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறது.
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts