திருச்சி சரகம் காவல்துறை பணியிடைப் பயிற்சி மையத்தில் திருச்சி மற்றும் திருச்சி மாநகரம் கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பதவியிலிருந்து உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் செல்லும் காவலர்களுக்கு இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 குறித்த பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் அவர்களின் தலைமையில் 10.12.2024 நடைபெற்றது.

பயிற்சியில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் ச.பிரபு குழந்தை நலக் குழு மற்றும் இளஞ்சிறார் நீதி குழு பணிகள், குழந்தை பராமரிப்பு

இல்லங்கள், தற்காலிக வளர்ப்பு திட்டம், பிற்காப்பு வளர்ப்பு திட்டம், குழந்தை தத்தெடுத்தல் நிதி ஆதரவுத் திட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டப் பிரிவுகள் குறித்தும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை களுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் மற்றும் குழந்தை பாதுகாப்பு குழுக்கள்,

கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குறித்து பயிற்சி வழங்கினார். பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.














