திருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைகால கராத்தே பயிற்சி முகாம் இம்மாதம் 07/05/2025 தொடங்கி 21/05/2025 வரை காலை 7 மணி முதல் 8:30 மணி வரை வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் திருச்சியில் இருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றனர் ஏற்கனவே கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்,

சான்றிதழ்களை பள்ளி முதல்வர் திருமதி T. பாவை அவர்கள் வழங்கினார்கள். அருகில் பயிற்சியாளர்கள் V.எழில், V.யஸ்வந்திகா மற்றும் M.தேவா ஆகியோர் உடன் இருந்தனர்.













