• Home
  • உலகம்
  • வாழ்வில் எல்லா அழகையும் ஒருங்கே பெற்று இசையழகி வாழ்வாங்கு வாழ்க!
உலகம்

வாழ்வில் எல்லா அழகையும் ஒருங்கே பெற்று இசையழகி வாழ்வாங்கு வாழ்க!

Email :211

வாழ்வில் எல்லா அழகையும் ஒருங்கே பெற்று இசையழகி வாழ்வாங்கு வாழ்க!
நேற்று நாட்டின் தலைச்சிறந்த தமிழிசைப் பாடகர் இளவல் கதிரவன் அவர்களின் அன்பு மகன் பாடகர் முகிலன் தனவள்ளி இணையருக்குப் புதுவரவாய் வாய்த்த பெரும் பேறு  அவர்தம் அன்பு மகளார்க்கு இசையழகி எனும் இனிய தமிழ்ப்பெயர் சூட்டி குறளோதி தமிழிய விளக்கங்கள் வழங்கி கல்விகேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்வாங்கு வாழ்ந்திட பாவேந்தரின் தாலாட்டையும் பாடி வாழ்த்தினேன்.

உடன் முதுமுனைவர் மறமானம் செறிந்த அறிஞர் பெருமகனார் ஐயா அன்பரசு அவர்களும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இசையழகி ஆகா! என்னே அழகிய இனிய தூயதமிழ்ப் பெயர்

தமிழர் அனைவரும் கதிரவன், முகிலன் போல் தம் குழந்தைகளுக்கு இனிய நற்றமிழ்ப் பெயரினைச் சூட்டி மகிழ்க!
நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!
இரா. திருமாவளவன்
தலைவர்
மலேசியத் தமிழ்நெறிக் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts