காந்தியடிகளின் 79ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி பொன்மலை ரயில்வே ஆர்மரிகேட் எதிரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் துரை வெங்கடேஷ், பிரிட்டோ, ஜோசப் மக்கள் சக்தி இயக்க ராமசந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்டு, அகிம்சை, சத்தியம், தேச சேவை ஆகிய காந்தியடிகளின் கொள்கைகளை நினைவுகூர்ந்தனர்.














