இன்று 12.03.2025 மருங்காபுரி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி தாழம்பாடியில் பள்ளியின் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கணக்குப் பிள்ளை பழனிவேல் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கிடுசாமி முன்னிலை வகுத்தார்.


பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பார்கள் வட்டார கல்வி அலுவலர் லதாபேபி அவர்கள் சிறப்புரை ஆற்றி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியர் வளர்மதி வாசித்தார்.

முன்னதாக வரவேற்புரை ஆசிரியர் சகாயமேரி கூறினார். ஆசிரியர் சாந்தி பரிசு பட்டியலை வாசித்தார். நிகழ்ச்சியை ஆசிரியர் காந்தி தொகுத்து வழங்கினார். நன்றியுரை ஆசிரியர் பெல்சி கூறினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான ஊர் பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.















