• Home
  • தமிழ்நாடு
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு
    மருத்துவ முகாம்!
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு
மருத்துவ முகாம்!

Email :138

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு
மருத்துவ முகாம்.
டிசம்பர்-23.12.2024 மருங்காபுரி வட்டாரம் கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு   கோவில்பட்டியில் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னாதாக நடந்த துவக்கவிழாவில் வரவேற்புரையை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஷபீனா கூறினார்.  மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அப்துல் சமது அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தனிவட்டாச்சியர் பாலகாமாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜஸ்டன் ஜோ, மாவட்ட உதவி திட்ட அலுவலர் அன்பு சேகரன், ஒன்றிய‌ பெருந்தலைவர் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார்,  வட்டார கல்வி அலுவலர்கள்  லதா பேபி, சைமன் பீட்டர், தேவகி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முகாமில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். மருத்துவர்கள் செவிலியர்கள் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியப்பயிற்றுநர்கள் , சிறப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர். மாணவர்களுக்கு,தேநீர்,  மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமை வட்டார வளமையம் சார்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts