தமிழ்நாடு

தியானப் பயிற்சி!

Email :115

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் தியான பயிற்சி நூலகத்தில் நடைபெற்றது. புத்தூர் கிளை நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். யோகா ஆசிரியர் விஜயகுமார் தியான பயிற்சி அளித்து பேசுகையில், உண்மையான மன அமைதியை அடைவதற்கும் மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கும் எளிமையான, நடைமுறை வழி தன்னை தானே கவனிப்பதே மன சுத்திகரிப்புக்கான ஒரு வழிமுறையாகும். ஒவ்வொருவரும் அவரவர் மனகிளர்ச்சி, விரக்தி மற்றும் ஒற்றுமையின்மையை அனுபவிக்கிறோம்.

நாம் துன்பப்படும் போது, நம் துன்பத்தை நமக்குள் மட்டும் வைத்துக்கொள்வதில்லை. மாறாக, அதை மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறோம். எனவே அவரவர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனம் ஒருநிலைப்பட்ட நிலையில் தேவையில்லாத மன சஞ்சலங்களில் இருந்தும் ஆழமான காரணங்களிலிருந்தும் விடுபட்டு ஒவ்வொருவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனுபவிக்க வழி வகுக்கும். மனதை ஒருநிலைப்படுத்த சமதளமான நிலப்பரப்பில் தரை விரிப்பான் மீதும், தரையில் அமர இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும்  கண்களை மூடி சுவாச இயக்கத்தை கவனித்தவாறு தியான பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் மனம் ஒருநிலைப்படும்.  மனம் ஒருநிலைபட்ட நிலையில் எந்த காரியத்தையும் முழுமையாக செயல்படுத்த இயலும்  என்றார். குணசேகரன், முகமது சுபேர், சந்திரசேகரன், முத்து வீரப்பன் அரிஸ்டோ மன்சூர் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts