இன்று 16.11.25 நமது *திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம்* 58 வது தேசிய நூலக வார விழாவின் முதல் நிகழ்ச்சியினை திருவானைக்காவல் கல்லனை ரோட்டில் உள்ள *டாக்டர்.சிற்றம்பலம் அம்சவள்ளி முதியோர் இல்லத்தில்* உள்ள மூத்த குடிமக்களுடன் கொண்டாடியது.

வரவேற்புரை: கிளை நூலகர் *திருமதி.விஜயலெஷ்மி* அவர்கள்
தலைமை: *திரு.த.வாசன் அவர்கள்* , ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரி
சிறப்பு பேச்சாளர்கள்
*திரு.செ.ஜெயராமன் அவர்கள்* , ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்
*திருமதி.இரா.ஜெயலெஷ்மி அவர்கள்,* ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர்
ஆகியோர் *நிமிர்ந்து நில்* எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
இருவரின் உரையையும் கேட்ட பெரியவர்கள் தங்கள் சோகம் துக்கம் மறந்து வாய்விட்டு சிரித்து இருவருடனும் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

நமது வாசகர் வட்டம் நான்காவது முறையாக (2018/2019/2024/2025) இங்கு நூலக வார விழா நிகழ்ச்சியை நடத்துவதால் நீண்ட நாட்களாக அங்கு இருக்கும் பெரியவர்கள் சிலர் என்ன அடையாளம் தெரிந்து வந்து நலம் விசாரித்து பேசியது நிறைவை தந்தது.
முடிவில் அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய *திரு.வாசன்* அவர்கள் வழங்கினார்கள் அவர்களுக்கும் *திரு.K.விஜயன்* (டைம்ஸ் ஆஃப் இந்தியா மேலாளர்)அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் நமது வாசகர் வட்டம் நிகழ்வு அங்கு நடக்கும் போதெல்லாம் அங்கு உள்ளவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு நாம் கேட்டுக்கொண்டதற்கினங்க *டாக்டர்.K.தீபக் அவர்கள் (விஷ்ராந்தி மென்டல் ஹெல்த் சென்டர்)* இரவு உணவிற்கான தொகையினை நன்கொடையாக வழங்கினார்கள். அவருக்கு நமது வாசகர் வட்டம் சார்பிலும் அங்கு இருந்த பெரியவர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள்.

இறுதியில் எனது நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.














