திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பில் போக்சோ சட்டம் குறித்த பயிற்சி வட்டாரக் கல்வி அலுவலர் எட்வர்ட் தேவகுமார் தலைமையில் 07.03.25 நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் மோரிஸ் ஜெயசுதா வரவேற்றார் மாவட்ட குழந்தை நல குழு உறுப்பினர் முனைவர் பிரபு பாதுகாப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் என்போர் யார் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள் என்போர் யார் மற்றும் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதி குழு பணிகள் பள்ளி
அளவிலான குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியரின் பங்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 ல் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளிடம் வாக்குமூலம் பெறும் விதம் வழக்கு பதிவு செய்யும் முறை மருத்துவ பரிசோதனை மறுவாழ்வு பணிகளில் காவல் துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் பங்கு பள்ளி அளவில் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைகள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் மாணவர் மனசு பெட்டியை கண்காணித்தல், ஆற்றுப்படுத்துதல் முறைகள்

குழந்தைகள் பாதுகாப்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் பங்கேற்று குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத சமூகமாக மாற்றுவதற்கு ஆசிரியர்களின் பங்கு குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 10 9 8 ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை எண் 14417 போதைப் பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மீட்பு குறித்த தொலைபேசி எண்கள் 10581, 14416 மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இளஞ்சிறார் நீதிச் சட்டம் குறித்தும் பயிற்சி வழங்கினார். பயிற்சியில் கருத்தாளர்களாக திருப்பஞ்சலி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேவியர் ஜெயசீலன் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சரண்யா ஆசிரியர் கோமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். 80 க்கும் மேற்பட்ட மண்ணச்சநல்லூர் வட்டார அளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.













