• Home
  • தமிழ்நாடு
  • பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா!
தமிழ்நாடு

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா!

Email :136

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா!

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் எழுதியுள்ள “ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” நூலை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆங்கிலத்துறைப் பேராசிரியரும், கல்லூரியின் அகத்தர உறுதிப்பிரிவு கூடுதல் இயக்குநருமான முனைவர் ரா.குர்திஷ் பேகம் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பார்பியர் (ஜூபிலி) அரங்கில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திருமிகு கே.என்.நேரு இந்நூலை வெளியிட மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் நூலைப் பெற்றுக் கொள்கிறார். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கௌரவ விருந்தினராகப் பங்கேற்று சிறப்பிக்கிறார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே‌‌.ச. நூல் குறித்த  மதிப்புரை வழங்கவுள்ளார். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. வாழ்த்துரையாற்ற இருக்கிறார்.  நிறைவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts