இன்று 09.12.2025 திருவானைக்காவல் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய “வாசகர் வட்டம்” நிகழ்ச்சி சிறப்பான முறையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்ச் செம்மல் “திரு.ராச.இளங்கோவன்” (தலைவர்: ராசவேலர் சென்பகத்தமிழரங்கு, திருவரங்கம் ) அவர்கள் கலந்துகொண்டு ஜெயிக்க பழகு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சுமார் 45 நிமிடங்கள் சிறப்பானதொரு உரை.

மாணவ மாணவியரை முழு ஈடுபாட்டுடன் கவனிக்க வைத்த லாவகம் / தமிழ் உச்சரிப்பு/ குறிப்புகள் ஏதும் இன்றி கோர்வையாக பேசியது என அனைத்திலும் சிறப்பு. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சி எனது வரவேற்புரையுடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு
தலைமை வகித்த முனைவர் மாது அவர்களுக்கும் நன்றியுரையாற்றிய முனைவர் மஞ்சுளா குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.














