பணி நிறைவு பாராட்டு விழா!
பொன்மலை பணிமனையில் பணி புரிந்த கே.திருமாறன் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

பொன்மலை இரயில்வே பணியில் 35 ஆண்டுகளில் பணிமனை Training Center ஆசிரியராகவும், ஜூனியர் இன்ஜினியர் (JE)ஆகவும், தற்போது வரை கடந்த 15 ஆண்டுகள் சீனியர் செக்ஷன் என்ஜினியர் (SSE) ஆகவும், தொழிற்சங்க பணியில் 30 ஆண்டுகள் REPU கோட்ட பொருளாளராகவும், 6 ஆண்டுகள் ரயில்வே காலனி கமிட்டி உறுப்பினராகவும், இரயில்வே மருத்துவமனை கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

மேலும் (IRTSA) இந்தியன் இரயில்வே டெக்னிக்கல் சூப்பர்வைசர் அசோசியேசனில் 20 ஆண்டுகள் கோட்ட செயலாளராகவும், தற்போது இணைப் பொதுச்செயலாளராகவும் பணியாற்றி நன் மதிப்பை பெற்றவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பொன்மலை ரயில்வே முதன்மை பனிமனை மேலாளர் சந்தோஷ் குமார் பட்ரோ,(CWM) துணை முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர்கள்

(Dy.CME)சரவணன், பாண்டியன், உயர் அதிகாரிகள், கவுன்சிலர் கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநிலபொருளாளர் கே.சி.நீலமேகம், ரயில்வே அதிகாரிகள், தொழிலாளர்கள், உறவினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் கே.திருமாறன் அவரை வாழ்த்தி நினைவு பரிசுகள், பொன்னாடைகள் போர்த்தி பாராட்டினார்கள்.















