• Home
  • தமிழ்நாடு
  • சாதனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி இணைந்து நடத்திய +2, +1 மாணவர்களுக்கான  “எழுமின் விழிமின்” உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
தமிழ்நாடு

சாதனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி இணைந்து நடத்திய +2, +1 மாணவர்களுக்கான  “எழுமின் விழிமின்” உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

Email :109

சாதனா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி இணைந்து நடத்திய +2, +1 மாணவர்களுக்கான  “எழுமின் விழிமின்” உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் செயலாளர் திரு சந்திரசேகர், சாஸ்திர பல்கலைக்கழக பேராசிரியர் திரு பத்ரிநாத், சாதனா அறக்கட்டளை தலைவர் திரு ரஜினிகாந்த் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக அமைப்பாளர் திரு ஆறுமுகம் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சாதனா அறக்கட்டளை மூலமாக திருச்சியை சுற்றி உள்ள கிராமங்களில் நடக்கும் பண்பாட்டு கல்வி மையங்களில் இருந்து ஏராளமான கிராமத்துக் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் தாய், தந்தையர்கள் இதில் கலந்துகொண்டு தங்களுக்கான எதிர்கால படிப்பை பற்றி முடிவு எடுப்பதற்கு சிறந்த வழிகாட்டு நிகழ்ச்சியாக

இந்த நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சி எந்த வணிக நோக்கமும் இல்லாமல் நேர்மையாக உண்மையாக நமது கிராமத்துக் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த நிகழ்ச்சி முற்றிலும் செயல்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், NIT, SASTHRA, ANNA UNI., BAHARATHIDASAN UNI., SRM UNI., IG COLLEGE யில் இருந்து பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? ” என்பதற்கான சிறந்த வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கினர்.

நிறைவு நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் திருச்சி கோட்டத் தலைவர்  திரு சம்பத் மற்றும் திரு ஆறுமுகம் ஆகியோர் “கல்வியை கடந்தும், வாழ்க்கை பயணத்தை தெளிவாக நோக்கி செல்லும் வழிகள்” குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளித்துப் பேசினர்.

நிகழ்ச்சியில் 300க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு கல்லூரியின் சார்பாக  சிறப்பிக்கப்பட்டது.
சாதனா அறக்கட்டளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts