• Home
  • தமிழ்நாடு
  • செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு!
தமிழ்நாடு

செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு!

Email :66

செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக தமிழ் ஆய்வு மன்றத்தின் இரண்டாம் நிகழ்வு நடைபெற்றது. தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவா் கு.அந்தோணிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துறைத்தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் முன்னிலை வகித்தார். தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவா் ம.தனலெட்சுமி ரத்தினமூர்த்தி எழுதிய தாக நதி நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். சிறுபாணாற்றுப்படையில் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.சீனிவாசன்  ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். இளங்கலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் தீபக் சமூக நல்லிணக்கத்தின் தேவை என்கிற பொருண்மையில் சமூக உரையாடல் நிகழ்த்தினார்.  இளங்கலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் கு.கதிர்காமன் பைசன் திரைப்படம் குறித்த திறனாய்வை வழங்கினார். முன்னதாக அ.சுபிக் ஷா
வரவேற்புரை வழங்கினார். நிறைவில் கு ஆர்த்தி நன்றி கூறினார். ஜோ.காயத்ரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தமிழாய்வுத்துறைப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 58 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வை மன்றப் பொறுப்பாளா் முனைவர் இரா.முரளிகிருட்டிணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts