• Home
  • தமிழ்நாடு
  • “சுய கற்றல் மையங்கள்” கல்விக்கான புதிய சிந்தனை முயற்சி, பள்ளிக்கல்வித்துறையின் சிறப்புகள்!
தமிழ்நாடு

“சுய கற்றல் மையங்கள்” கல்விக்கான புதிய சிந்தனை முயற்சி, பள்ளிக்கல்வித்துறையின் சிறப்புகள்!

Email :163

“சுய கற்றல் மையங்கள்” கல்விக்கான புதிய சிந்தனை முயற்சி!

எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு),
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
காஞ்சிபுரம்.
பள்ளிக்கல்வித்துறையின் சிறப்புகள்!

தமிழக அரசின் பல கல்வி திட்டங்கள் ஏழை குழந்தைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
இல்லம் தேடிக்கல்வி, சுவையான
காலை உணவு, சத்தான மதிய உணவுத், தொடர்ந்து படிக்க கல்வி உதவித்தொகை மற்றும்
விலையில்லா  தரமான புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சிறப்பான சீருடைகள், வரைந்து மகிழ வண்ண பென்சில்கள், விரைவாக பள்ளிக்கு செல்ல சைக்கிள்கள், கணிப்பொறியில் சிறந்து விளங்க லேப்டாப் மற்றும் சுகமான பேருந்து பாஸ் உள்ளிட்ட பல பொருட்கள்  வழங்கப்படுகின்றன.

புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை போன்றவை கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது
“கல்வி என்பது மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சக்தியாகும்”
– நெல்சன் மண்டேலா!
கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையாகும். ஆனால் கிராமப்புறங்களில், இது நடைமுறைப்படுத்தப்படுவதில் பல சவால்கள் உள்ளன.

குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள், வீட்டில் தொடர்ந்து கற்பது இல்லை, பெற்றோர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லை என்பன போன்ற கருத்துக்கள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.
இந்த சவால்களுக்கு தீர்வாக “சுய கற்றல் மையங்கள்” அமைக்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகள் வீட்டிலேயே பாதுகாப்பாக கற்றல் செயல்பாட்டில் ஈடுபட உதவுகின்றன. பெற்றோர்கள் வழிகாட்டிகளாக செயல்படுவதன் மூலம் குழந்தைகளின் திறமைகளையும் வளர்ச்சியையும் நேரடியாக காணலாம்.
கல்விக்கான புதிய மாற்றம்.

சுய கற்றல் மையங்கள் தொடங்கியதில் சில சிரமங்கள் இருந்தாலும், அதன் பலன்கள் தற்போது பல மாவட்டங்களில் தெளிவாகக் காணப்படுகின்றன. திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சுய கற்றல் மையங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன.
இந்த மையங்களில் குழந்தைகள் கதை சொல்வது, பாட்டு பாடுவது, படம் வரைவது, அறிவியல் பரிசோதனைகள் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இது குழந்தைகளின் கற்பனை திறனையும் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. விடுமுறைகளில் கூட கற்றல் சோர்வு ஏற்படாமல் தொடர்ச்சியாக கற்றலுக்கான ஆர்வத்தை உருவாக்குகிறது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு:
பெற்றோர்களின் ஒத்துழைப்புடன், ஆசிரியர்கள் WhatsApp குழுக்களை உருவாக்கி குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் செயல்முறையை நேரடியாக பார்க்கின்றனர்.
“கல்வி பெற்ற பெற்றோர்களின் குழந்தைகளே நல்ல முறையில் படிப்பார்கள்” என்ற தவறான கருத்து மாறுகிறது.
சமூகத்தில் உருவாகும் மாற்றம்:
சுய கற்றல் மையங்கள் சமூகத்தில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களில், இந்த மையங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெற்றோர்கள் கூடுதல் செலவுகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.
கற்றல் மையம் மூலம்  பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்  சமுதாயத்தில் முன்னேறுகின்றனர். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கும், தங்கள் திறமைகளைக் கண்டறியவும் இந்த மையங்கள் உதவுகின்றன.
மகாத்மா காந்திஜியின் கருத்து மற்றும் சுய கற்றல்:
காந்திஜி வலியுறுத்தியது, “கல்வி என்பது புத்தகங்களால் மட்டுமல்ல, அனுபவத்தால் கற்றல் முக்கியமானது” என்பதாகும். கிராமப்புறங்களில் கல்வி நேர்மையும் நியாயமும் கொண்ட நற்பண்புகளை உருவாக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.

சுய கற்றல் மையங்கள் காந்திஜியின் இந்தக் கருத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
கிராமப்புற குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முழுமையான கல்வித் தளத்தை உருவாக்குகின்றனர்.
கல்வியின் சக்தி:

நெல்சன் மண்டேலா சொல்வதுபோல், கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த ஆயுதமாகும். “கற்றல் என்பது தொடர்ச்சியாக நிகழவேண்டிய செயல்” என்பதையும் சுய கற்றல் மையங்கள் உறுதியாக நிலைநாட்டுகின்றன.
சுய கற்றல் மையங்கள் கிராமப்புற குழந்தைகளின் கல்வியில் புதிய அத்தியாயங்களை எழுதுகின்றன.
சுய கற்றல் மூலம் கல்வி என்பது சமூகத்தை முன்னேற்றுவதற்கான வழிகாட்டி என்பதை உணர்த்துகின்றன.
நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts