• Home
  • தமிழ்நாடு
  • “சுய கற்றல் – இயற்கை உணர்வும் மனிதாபிமானமும்”.
தமிழ்நாடு

“சுய கற்றல் – இயற்கை உணர்வும் மனிதாபிமானமும்”.

Email :187

“சுய கற்றல் – இயற்கை உணர்வும் மனிதாபிமானமும்”.


வள்ளலாரின் கருத்தும் ஜெ.சி.போஸின் அறிவும் – மாணவியின் செயலில்”.

எஸ் சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் கூறியது போல, பிற உயிர்களின் துயரைக் கண்டு மனிதன் கருணையுடன் செயல்பட வேண்டும்.

இதே போன்று, “தாவரத்திற்கும் உயிர்கள் உண்டு” என அறிவியல் அடிப்படையில் நம்மிடம் விளக்கிக் கூறியவர் சர் ஜெ.சி.போஸ் (Jagadish Chandra Bose) ஆவார்.

அவர் தாவரங்களும் உணர்ச்சி கொண்டவை என்பதைக் குறிப்பிட்டு, அவற்றும் வெளிப்புற சூழலுக்கு உணர்வுபூர்வமாக எதிர்வினை அளிக்கின்றன என்பதை விஞ்ஞானப் பரிசோதனைகளின் மூலம் நிரூபித்தார்.

இதுவே மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துகிறது.

இதைச் சிறந்த உதாரணமாக காட்டும் ஒரு நிகழ்வு, திருச்சி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாதர் பேட்டையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்குள் நிகழ்ந்தது.

வார விடுமுறையில் தாத்தா வீட்டிற்கு சென்ற மாணவி, நீரின்றி வாடிய ஒரு செடியைக் கண்டபோது மனம் உருகியது.

உடனே செடிக்கு தண்ணீர் ஊற்றி, அதை பாதுகாக்க முடிவுசெய்தாள். பெற்றோரும் இதை ஆதரித்து உறுதுணையாக இருந்தனர்.

ஆசிரியர் திருமதி .M.தனலட்சுமி , பட்டதாரி ஆசிரியர் குழந்தைகள் சுயமாக கற்க வேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சி, அந்த மாணவிக்குள் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்த்தது.

இது, கல்வியின் உண்மையான நோக்கை எடுத்துக்காட்டுகிறது. சுய கற்றல் என்பது புத்தகங்களுக்குள் சிக்கி போகாமல், இயற்கையை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்க செய்கிறது.

மாணவர்கள் தங்களது அனுபவங்களின் மூலம் கல்வியை முழுமையாகக் கற்க வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே, கல்வியின் முழுமையான பயன் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

கல்வி என்பது புத்தக அறிவை மட்டும் அல்ல; வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கற்றுக்கொள்வதுவும் ஆகும்.”
01.02.2025
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts