“சுய கற்றல் மூலம்
கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் திருநெல்வேலி மாவட்டம்.”
22.01.2025
ஆக்கம்:
எஸ். சிவகுமார்,
முதல்வர் (பணி நிறைவு),
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
திருநெல்வேலி மாவட்டம், கல்வி வளர்ச்சியின் முன்னோடியாய், தனது மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான பரிசோதனை அடிப்படையில் சுய கற்றல் மூலம் அடிப்படை அமைப்புகளை உருவாக்கி வருகிறது.
இங்கு கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்,
குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பு:
சிறப்பான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாகும்.
அவர்கள், எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் கற்றுத்தருவதால் குழந்தைகள் பள்ளியில் பாடங்களை கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்.
ஆசிரியர்கள் வழங்கும் வழிகாட்டுதலின் மூலமாக குழந்தைகள் தேர்ச்சி உயர்ந்து வருகிறது.
கற்றல் இடைவெளி குறைப்பு மற்றும் சுய கற்றல் முறை:
கற்றல் இடைவெளி ஒரு பெரிய சவாலாக இருந்தாலும், பெற்றோர்களின் வழிகாட்டுதலின் மூலம் சுய கற்றல் முறையில் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எளிய கற்றல் சூழலை ஏற்படுத்தி அவர்களை தொடர்ந்து படிக்கவும் விளையாடவும் ஊக்குவிக்கின்றனர்.
இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சுய கற்றல் முறை, குழந்தைகளின் தனித்தன்மையை அறிந்து அவர்களை தங்கள் திறன்களுக்கேற்ப கற்றுக்கொள்ள உதவுகிறது.
இதன் மூலம் குழந்தைகள் சரளமாக எழுதுவதும் நுணுக்கமாக படிப்பதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது.
கல்வியின் தாக்கம்:
சுய கற்றல் முறை குழந்தைகளின் சுயநினைவை மற்றும் நம்பிக்கையை, அதிகரிக்க செய்கிறது. அவர்கள் சந்திக்கின்ற கல்வி சவால்களை தானாக சமாளிக்க உதவும் மன உறுதியை வழங்குகிறது. மேலும், பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலில் நேரடியாக ஈடுபடுவதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான மனரீதியான இணைப்பு பலம் பெறுகிறது.
முடிவு:
திருநெல்வேலி மாவட்டத்தின் கல்வி முன்னேற்றம் முன்மாதிரியாக திகழ்கிறது.
குழந்தைகளின் முழுமையான கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் இந்த முயற்சி, வருங்காலத்திற்கான சிறந்த தலைமுறையை உருவாக்கும் வழியை அமைக்கிறது.
நன்றி.














