சிலம்பம் வாத்தியார் ரயில்வே பணியிருந்து ஒய்வு விழா!

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 40 வருடம் பணி புரிந்து கொண்டே மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் பெரியோர்களுக்கும் சிலம்பம் சொல்லி கொடுத்தவர் டி.ஜீவானந்தம்.
இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பல சிலம்பம் வீரர்கள் மாநில, மாவட்ட அளவில் பரிசுகளை வென்றவர்கள்.

இவரின் பணி ஓய்வு நிறைவு விழாவிற்கு மக்கள் சத்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், சேகர், பெரியசாமி, ராஜ் சேகர், சேட்டு, சிவகாமி, மீனா, கரிகாலன்,DREU நண்பர்கள், அவருடன் பணி புரிந்த நண்பர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.














