• Home
  • தமிழ்நாடு
  • திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டி விழா!
தமிழ்நாடு

திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டி விழா!

Email :384

திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டி விழா!
மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) திருச்சி இலக்கு மக்கள் திட்டம் TI சார்பாக இன்று இலக்கு மக்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சமயபுரம் பகுதியில் உள்ள s.கண்ணனூர் சிறப்புநிலை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு சமையல் போட்டி நடைபெற்றது.

இதில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள திருநங்கைகள் பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமிகு.விமல் ஆரோக்கியமேரி ஒருங்கினைந்த திட்ட மேலாளர். மாவட்ட AIDS கட்டுபாட்டு அலகு, அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் திருநங்கைகளுக்குள்ள திறமைகள் வெளிகொணரப்பட்டு ஒதுக்குதல் இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும் என்பதற்காக PDI நிறுவனம் பல வழிகளில் செயல்படுகின்றது என்றும். 

கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கைகளின் திறமைகளை அரசு அங்கீகரித்து அவர்களுக்கு அனைத்து நல திட்ட மற்றும் வேலை வாய்ப்பு உதவிகளையும் செய்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.
சிறப்புரை வழங்கிய திருமிகு.புஷ்பலதா மாவட்ட ICTC மேற்பார்வையாளர். அவர்கள் பேசுகையில் விளிம்புநிலை பெண்களுக்கு அரசு சலுகைகள் அதை பெற உள்ள வழிகள் அத்துடன் ஆரோக்கியம் அவசியம் பற்றி எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் திரு.ராஜேந்திரன்.  ஒருங்கினைந்த திட்ட அலுவலர். வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் திரு.முரளி முன்மாதிரி கல்வியாளர் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்
நிகழ்ச்சியை திரு.முத்துக்குமார் PDI திட்ட மேலாளர் மற்றும் பணியாளர்கள் மூலம் தொகுத்து வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts