ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “Say no to Drugs, Say Yes for Future” என்ற தலைப்பில் மேல்நிலைப் பயின்று வரும் மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. கா. சந்தோஷ் குமார், இளநிலை உதவியாளர், மாவட்ட சமூக நலத்துறை, அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வினை ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இரண்டாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவர் திரு. S. நித்திஷ் குமார் ஒருங்கிணைத்தார்.















