• Home
  • தமிழ்நாடு
  • மனநலப் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு பயிலரங்கில் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் பங்கேற்பு!
தமிழ்நாடு

மனநலப் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு பயிலரங்கில் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் பங்கேற்பு!

Email :24

மனநலப் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு பயிலரங்கில் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் பங்கேற்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்ட யூத் ரெட் கிராஸ்  மற்றும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை இணைந்து ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற கருத்தின்கீழ் என்னும் பொருண்மையில் நடத்திய ஒருநாள் ஊடகப் பயிலரங்ம் நடைபெற்றது.
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்பயிலரங்கில் செயின்ட் ஜோசப் கல்லூரியின்யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் பங்கேற்று மனநலம், மனநலப் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்துப் பயனுள்ள கருத்துகளைப் பெற்றனர்.
விழிப்புணர்வுச் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் Reels தயாரித்தல், குறும்படம் தயாரித்தல், புகைப்படம் மற்றும் டிஜிட்டல் போஸ்டர் உருவாக்குதல், தெருக்கூத்து மற்றும் வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் குறித்த நடைமுறைப் பயிற்சிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இப்பயிலரங்கம் மாணவர்களின் படைப்பாற்றல், ஊடகத்திறன் மற்றும் மனநலம் குறித்த சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts