ஸ்ரீரங்கம் தேவி தெரு நகராட்சி பள்ளியில் சேர குழந்தைகள் குவிந்தனர்!
திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம்,
ஸ்ரீரங்கம் தேவித்தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் வகுப்பு குழந்தை சேர்க்கை மற்றும் சாரண இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது
5.3.2025 இன்று பள்ளியில் முதல் வகுப்பு குழந்தை சேர்க்கையை பாரம்பரிய முறைப்படி குழந்தைகளை , மாலை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

தாய் மொழி மூலம் கல்வி கற்க தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில்ஆண் 14பெண் 13 மொத்தம் 27 குழந்தைகள் மற்றும் மழலையர் வகுப்பில் 2 ஆண் 2 பெண் மொத்தம் 4குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.
மாவட்டம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், காஞ்சிபுரம் முன்னாள் முதல்வர் எஸ். சிவகுமார் ஏற்கனவே பள்ளியில் படித்து வரும் முதல் வகுப்பு மற்றும் மழலையர் வகுப்பு குழந்தைகள் உடன் உரையாடி குழந்தைகளின் கற்கும் திறனை வெளிப்படுத்தினார்.
தேவி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாரண இயக்கத்தின் மழலையர் பிரிவான
முயல் குட்டிகள் /தொடக்க நிலை குழந்தைகளுக்கான குருளையர், நீலப் பறவையர் , பிரிவு சாரண, சாரணியர் பிரிவு என அனைத்துப் பிரிவுகளிலும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் சாரண சீருடையில் செயல் விளக்கம் செய்து காட்டினார்.

சாரண இயக்க மாநில துணை ஆணையர்
K.மருதநாயகம் சாரண இயக்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்தினார்.
பள்ளி ஆசிரியர்கள் வந்த அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுபொருட்களை பரிசாக வழங்கி வரவேற்றனர்
வட்டாராக் கல்வி அலுவலர் மருதநாயகம், ஸ்டான்லி இராஜசேகர் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் மீனா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பத்மாவதி கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மஞ்சுளா பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஸ்ரீரங்கம் செஞ்சிலுவை சங்க ஆணையர் ரோட்டேரியன் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் பூங்கொடி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.















