• Home
  • தமிழ்நாடு
  • 77வது குடியரசு தினத்தன்று செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்!
தமிழ்நாடு

77வது குடியரசு தினத்தன்று செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்!

Email :133

77வது குடியரசு தினத்தன்று செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உன்னத பாரத இயக்கத்தின்

2.0 கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகமங்கலம் சேதுராப்பட்டி, இனாம்மாத்தூர், அளுந்தூர், மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளிலும் செப்பர்டு பணி செய்யும் கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா மற்றும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படியும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச தலைமையில் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச உன்னத பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

பேராசிரியர் டோம்னிக் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரின் ஆலோசனை படி முதுநிலை ஒருங்கிணைப்பாளர்; லெனின் இனாம்மாத்தூரில் உன்னத பாரத் அபியான் இயக்கம் பற்றியும் அரசு திட்டங்கள் பற்றி டிஜிட்டல் போர்டு வைப்பது தொழில் முனைவோரை உருவாக்குவது மரக்கன்றுகள் நடுதல் பற்றியும்
ஆளுந்தூர் ஊராட்சியில் வணிகவியல் துறை பணியமர்வு II மாணவர்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் சுகாதாரம் பற்றியும்

நாகமங்கலத்தில் ஆங்கிலத்துறை பணியமர்வு II மத்திய மாநில அரசின் நல திட்டங்கள் குறித்தும்
இனாம்குளத்தூர் ஊராட்சியில் குப்பை சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் இயக்கங்களை ஒழுங்கமைத்தல் மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் பற்றியும்
சேதுராப்பட்டியில் வணிகவியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை பணியமர்வு I மாணவர்கள் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் செங்குத்தாக சுழலலும் சிறுகாற்றாலை நிறுவப்படுவது பற்றியும் மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டம் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்

மேலும் எதிர்வரும் கோடைகாலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுபுற சுகாதார மேம்பாடு பற்றியும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது முன்னதாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரை உறுதியேற்பு நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள், கிராம பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts