• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பார்டு சார்பாக கல்லூரியின் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு விரிவாக்கத்துறையின் நகர்புற பின்தங்கிய மக்களின் சமூதாய மேப்பாட்டிற்கான புத்தாக்கப்பயிற்சி கல்லூரியின் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பார்டு சார்பாக கல்லூரியின் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு விரிவாக்கத்துறையின் நகர்புற பின்தங்கிய மக்களின் சமூதாய மேப்பாட்டிற்கான புத்தாக்கப்பயிற்சி கல்லூரியின் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.

Email :13

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பார்டு சார்பாக கல்லூரியின் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு விரிவாக்கத்துறையின் நகர்புற பின்தங்கிய மக்களின் சமூதாய மேப்பாட்டிற்கான புத்தாக்கப்பயிற்சி கல்லூரியின் கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியம் சே ச இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சமூக மேம்பாட்டில் விரிவாக்கத்துறை செப்பர்டு ஒரு வரலாறு நகர்புற பின்தங்கிய மக்களின் சமூக வளர்ச்சிக்கு மாணாக்கர்கள் ஈடுபாட்டுடன் சேவை செய்ய வேண்டும் கல்லூரி இந்த சந்தர்பதை ஏற்படுத்தி தருகிறது சமூதாயநலனில் அர்பணிப்பு சேவை மனப்பான்மை மற்றும் அக்கறையுடன் பணியாற்றுகள் என்று கூறி ஆசியுரை வழங்கினார்.

மேலும் துணைமுதல்வர் அருள்முனைவர் மணி வளன் சே ச செப்பர்டு மக்களை மேம்படுத்தும் திட்டமாக உள்ளது சமூதாயத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு மாணாக்கர்களாகிய நீங்கள் உதவுங்கள் உங்களின் இந்த செயல் எதிர்கால தலைமுறைக்கு பாடமாக அமையும்; உங்களின்; செயல்பாடுகள் சிந்தனைகள் அனைத்தும் சமூதாய மேம்பாட்டு எண்ணங்களாகவே இருக்கட்டும் சிறப்பாக செய்யுங்கள் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தொடக்கவுரையில்

மறைந்த அருள்முனைவர் ஜேசுதாசன் சே ச 40 வருடங்களுக்கு முன் தொலைநோக்கு பார்வையுடன் விரிவாக்கத்துறையை தொடங்கி எவ்வாறு மாணாக்கர்கள் வழியாக செயல்படுத்தினார் என்பதனை பற்றியும் அதன் பின்னர் செப்பர்டு திட்டத்தில் சமூகப்பணிகளில் ஈடுப்படும் மாணாக்கர்கள் தங்களின் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட திட்டபணி அறிக்கை தயார் செய்தல் அவற்றை செயல்முறை படுத்துதல் பற்றி விளக்கவுரையாற்றினார்.

முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் தனது விளக்கவுரையில் செப்பர்டு திட்டம் பற்றியம் மாணாக்கார்கள் நகர்புற பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக செய்து கொண்டிருக்கிற செயல்பாடுகள் வளர்ச்சி பற்றியும் செயல்படக் காட்சிகள் வழியாக விளக்கி கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்பும் பின்பும் செய்ய கூடிய அறிக்கை தயார் செய்தல் அதன் செயல்முறை ஆவணப்படுத்தல் மாணாக்கர்கள் நகர குடிசை வாழ்பகுதிகளுக்கு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் எடுத்துக் கூறினார்

ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வந்தவர்களை வரவேற்றார் ஜோசப் கிறிஸ்து ராஜா முடிவில் நன்றி கூறினார்
ஒருங்கிணைப்பாளர் யாசோதை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பணிமுறை 1 மற்றும் 2-ன் பேராசிரியர்கள் மாணாக்கார்கள் உட்பட 720 பேர் கலந்து கொண்டார்கள்.
தொழில் நுட்ப உதவிகளை இளநிலை உதவியாளர் அமலேஸ்வரன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts