• Home
  • தமிழ்நாடு
  • தஞ்சாவூர் அரசினர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவும் தமிழ் மன்ற விழாவும் 24.05.2025 அன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு

தஞ்சாவூர் அரசினர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவும் தமிழ் மன்ற விழாவும் 24.05.2025 அன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Email :104

தஞ்சாவூர் அரசினர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவும் தமிழ் மன்ற விழாவும் 24.05.2025 அன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயபால் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்  முனைவர் கலைமதி தமிழ் மன்ற அறிக்கை வாசித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை – செப்பர்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பல்வேறு போட்டிகளில் வென்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் சான்றிதழும் வழங்கினார்.

கணிதவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் ராஜுபிள்ளை, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் மனோஜ் குமார், தஞ்சை சரபோஜி கல்லூரி பேராசிரியர் தேவராஜ், ஆசிரியர் விஜய் அமிர்தராஜ், பல்வேறு துறை பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ரம்யா மற்றும் மாணவிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கலைநிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் பங்கெடுத்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts