திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியருக்கு விருது!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா. சலேத். 2022 ஆம் ஆண்டு தமது 25 நூல்களை ஒரே அரங்கில் வெளியிட்ட எழுத்தாளர்களைத் தம் பக்கம் ஈர்த்தவர். இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள் என முன்னணி இதழ்களில் தொடர்ந்து வரும் எழுத்தாளர். மேற்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நேற்று நடைபெற்ற தன்முனைக் கவிதைகள் குழும முப்பெரும் விழாவில் இவருக்குத் “தகைசால் கட்டுரையாளர் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம், ஓவியக்கவிஞர் அமுதபாரதி, தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா, கவிஞர் வெற்றிப்பேரொளி, அன்புப்பாலம் இதழ் ஆசிரியர் ச. விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.














