தமிழ்நாடு

கோயிலில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா!

Email :191

கோயிலில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, திருச்சி செந்தண்ணீர்புரம் அருள்மிகு செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு 20.04.25

நடைபெறுவதை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அரசமரம் மற்றும் வேம்புமரம் நடும் நிகழ்வு 07.04.25 காலையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நடந்தது.

கோயிலில் அரசமரம் மற்றும் வேம்பு வைப்பதற்கான காரணம், அவை ஆன்மீக மற்றும் கலாச்சார ரீதியாக புனிதமானவை என கருதப்படுவதுதான்.    
அரசமரம் (அரசு மரம்):
குருகுல கல்வி முறையில் அரசமரத்தடியில் குருமார்கள் கல்வி கற்பித்தது குறிப்பிடத்தக்கது.
இம்மரத்தைச் சுற்றி வந்தால் மூவரின் அருளும் கிடைக்கும்.

வேம்பு மரம்:
வேம்பு மரம் நற்பலன்களையும், தீய சக்திகளை விரட்டுவதையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
வேப்ப மரத்தின் இலைகள் மற்றும் வேர்கள் கிருமிநாசினி மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

வேம்பு மரம் இந்து மதத்தில் புனித மரமாக பார்க்கப்படுகிறது.
அரசமரம் அதிகமான ஒசோன் காற்றையும், வேம்பு நோய்களை குணப்படுத்தும் காற்றையும் தருகிறது.
இதனால் உடலில் உள்ள நோய் கிருமிகள் இல்லாமல் போகும்.

இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ, மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், மாநில நிர்வாகி வெ.இரா. சந்திரசேகர், 35ஆவது பகுதி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ், கோயில் தலைமை நிர்வாகி ரெங்கநாதன் மற்றும் கோயிலில் நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts