• Home
  • தமிழ்நாடு
  • 5 வருடத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்காற்றுகளை நட்ட திருச்சி அறக்கட்டளை – ஒவ்வொரு வீட்டிலும் மரம் நட வேண்டும் என கோரிக்கை.
தமிழ்நாடு

5 வருடத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்காற்றுகளை நட்ட திருச்சி அறக்கட்டளை – ஒவ்வொரு வீட்டிலும் மரம் நட வேண்டும் என கோரிக்கை.

Email :100

5 வருடத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்காற்றுகளை நட்ட திருச்சி அறக்கட்டளை – ஒவ்வொரு வீட்டிலும் மரம் நட வேண்டும் என கோரிக்கை.
மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் 8ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5 வருடங்களில் 25000 முதல் 35000 மரங்கள் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிட்டு அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ரயில்வே அருங்காட்சியகம்  பின்புறம் அருங்காட்சியம் பூங்காவில் தலைவர் கேசவன் தலைமையில்  சிறப்பு விருந்தினர் கண்மலை டிரஸ்டின் நிர்வாகி எடிசன், மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், ஹரி, சஜித், லோகேஷ், டேனியல், ஜாபர், ஸ்டெஃபி ஆகியோர் ஒன்றிணைந்து 50மரக்கன்றுகளை இன்று  நட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கன்மலை அறக்கட்டளையின் நிர்வாகி எடிசன் இன்று ரம்ஜானை முன்னிட்டு 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. மண்ணுக்கும், மக்களுக்கும் அறக்கட்டளை நோக்கம் என்னவென்றால் மக்களுக்கு இந்த மண்ணோடு சேர்ந்து சுகாதார, சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் என்று நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நாட்டி வருகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழலை கொடுத்துச் செல்கிறோம் என்று நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இப்பணியை  மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த 5வருடமாக சுமார் 25000 முதல் 30000 மரக்கன்றுகளை நாட்டியுள்ளோம்.
இன்று நிலநடுக்கம் ஏற்படுகிறது, வெப்பம் அதிகரித்து வருகிறது, இதை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக மரம் நட வேண்டும் என்பதைத்தான் எங்களது நோக்கமாக வைத்து செயல்படுகிறோம். வரும் ஒரு மாதத்திற்குள் 100 மரக்கன்றுகளை நட திட்டுமிட்டு செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts