திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்
இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயங்கிவரும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் – திருச்சி சிட்டி இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கல்லூரியின் அருள்தந்தை கே பி ஜோசப் அரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம. பிரான்சிஸ் சத்தியசீலன் வரவேற்புரை வழங்கினார்.
இரத்ததான முகாமைத் தொடங்கிவைத்த கல்லூரி
முதல்வர் தம் தலைமையுரையில் இரத்ததானம் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி, சமூகப் பொறுப்புள்ள இளையோராக நீங்கள் பங்கேற்பு செய்வது பாராட்டத்தக்கது என எடுத்துரைத்தார்.
இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மாணிக்கவாசகம் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. குணசேகரன், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாகி லயன் திருமதி. சுபா பிரபு, ரோட்டரி கிளப் – திருச்சி சிட்டி தலைவர் எஸ். பாலாஜிஆகியோர் உயிர்களைக் காப்பாற்றுவதில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தனர்.
கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பா.நளினி நன்றியுரை வழங்கினார்.
திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையிலிருந்து இரத்த தானத்தை ஏற்பதற்காக மருத்துவர்கள் வருகை தந்தனர். கல்லூரியின் பல துறைகளைச் சார்ந்த 79 மாணவர்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கினர். இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் முனைவர். கு. அந்தோணி ராஜா உள்ளிட்ட பேராசிரியர்கள் இரத்ததான முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.














