• Home
  • தமிழ்நாடு
  • வானவில் மன்றத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட மீளாய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு

வானவில் மன்றத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட மீளாய்வுக் கூட்டம்!

Email :111

வானவில் மன்றத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட மீளாய்வுக் கூட்டம்!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வானவில் மன்றத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலிலும், உதவித் திட்ட அலுவலர் அவர்களின் ஆலோசனைபடியும் இன்று 07.03.2025 தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளரும், வானவில் மன்ற மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளருமான மு.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அறிவியல் காலண்டரை அறிமுகப்படுத்தி பேசினார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜான் சுரேஷ் அவர்கள் ‘அறிவியல் காலண்டரை’ வெளியிட வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான கா.ச.ஜீவானந்தன் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார்.

வானவில் மன்ற கருத்தாளர்களின் பிப்ரவரி மாத மீளாய்வும், மார்ச் மாதத்திற்கான பயிற்சியும் நடைபெற்றது.

எய்டு இந்தியா மண்டல ஒருங்கிணைப்பாளரும், வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு.அவ.ராஜபாண்டி அவர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து, நிறைவாக நன்றி கூறினார்.

பிறகு, சர்வதேச பெண்கள் தின கொண்டாடும் வகையில் அறிவியல் விளையாட்டுகள் நடத்தி முதல் மூன்று இடத்தை பிடித்த வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்போட்டியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முசிறி ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளருமான சு.ஸ்ரீதரன் அவர்களும், மணப்பாறை ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர் சுரேஷ் அவர்களும் ஒருங்கிணைத்தார்கள்.

அன்புடன்,
மு. மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
திருச்சிராப்பள்ளி, மாவட்டம்.
செல் : 97878 66135.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts