“உலகத் தாய்மொழி தின விழா”
21.02.2025 வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில், தமிழாய்வுத் துறையில் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனும் தலைப்பில் கவியரங்கம் நடத்தப்பட்டது. விழாவின் தொடக்கமாக கல்லூரித் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் தலைமையுரையாற்றியபோது பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும், பிற மொழி இலக்கியங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும் அறிவுரை வழங்கியும், தமிழ் மொழியின் தொன்மையையும் எடுத்துரைத்தார்.

கல்லூரிச் செயலர் பொன். இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கியபோது தமிழ் இலக்கிய செம்மாந்த கருத்துக்களை பிறமொழிகளில் பிற நாட்டவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு பிறமொழிகள் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்த்திட வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் முனைவர் அ. வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம், கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார். விழாவில் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் முனைவர் சி .பிரபாகரன் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவில் பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் கவியரங்கில் கலந்துகொண்டு ‘ “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். கவி அரங்கிற்கு பேராசிரியர் அ.சசிகலாதேவி நடுவராக இருந்து வெற்றியாளர்களை தெரிவு செய்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழுடன் கவிக்குயில் பட்டமும், நூல்களும் வழங்கி பாராட்டினார்கள். மேலும் திருக்குறள் 1330 குறளும் ஒப்புவித்த மூன்றாம் ஆண்டு மாணவி மு.பவித்ரா அவர்களுக்கு நூல்களும் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை முனைவர் ரெ. மலர்விழி , முதுகலைத் தமிழ் மாணவி சீ.கமலஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக முதுகலைத் தமிழ் மாணவன் ஏ.கிருபாகணேஷ் நன்றி தெரிவித்தார்.













