• Home
  • தமிழ்நாடு
  • ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
தமிழ்நாடு

ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

Email :178

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு  நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது.

திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார் நூலகப் பணியாளர் மீனாட்சி சுந்தரம், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.
ஃபிலுமெனி சேகரிப்புக்கலை குறித்து முகமது சுபேர் பேசுகையில்,
ஃபிலுமெனி  என்பது பல்வேறு தீப்பெட்டிகள்  சேகரிக்கும் பொழுது போக்காகும். தீப்பெட்டி என்பது அட்டை அல்லது மெல்லிய மரத்தால், காகித அட்டையால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. தீக்குச்சிகளை  வைக்க வடிவமைக்கப்பட்டது .

தீக்குச்சிகளை ஒளிரச் செய்வதற்கு தீப்பெட்டியின் ஒரு விளிம்பில் ஒரு கரடுமுரடான  மேற்பரப்பைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் சிறுவர்கள் தீப்பெட்டி அட்டை கொண்டு விளையாட்டில் ஈடுபட்ட காலங்கள் உண்டு. ஆனால் உலகம் முழுவதும் தீப்பெட்டி அட்டை சேகரித்து ஃபிலுமெனி கலையில் பலர் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பழங்கால தீப்பெட்டிகளில் இருந்து நவீன கால தீப்பெட்டிகள் வரை தீப்பெட்டி சேகரிப்பாளர்கள் ஈடுபட்டு தீப்பெட்டி குறித்த ஆய்வினை மேற்கொள்கிறார்கள். தீப்பெட்டி சேகரிப்பினை கொண்டு உலக சாதனை படைத்துள்ளார்கள். சேகரிப்புக்கலை குறித்து பல நூல்களும் வெளிவந்துள்ளன. சேகரிப்பு கலையில் ஈடுபடுபவர்கள்  ஆர்வம் உள்ள சேகரிப்பு கலை  நூல்களை கற்றறிந்து சேகரிப்பு கலையில் ஈடுபட வேண்டும் என்றார்.
பிஷப் ஹீபர் தன்னாட்சிக் கல்லூரி வரலாற்று துறை முதுகலை மாணவர்கள் அரிஸ்டோ வசந்தகுமார், திவாகரன், கிஷோர், லோகேஷ்வரன், இசாக். கிஷோர் குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts