• Home
  • தமிழ்நாடு
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்கல்வி- சட்ட நுழைவுத் தேர்வு உண்டு உறைவிட ஐந்து நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகம் திருச்சி, 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்கல்வி- சட்ட நுழைவுத் தேர்வு உண்டு உறைவிட ஐந்து நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகம் திருச்சி, 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடைபெறுகிறது.

Email :267

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர்கல்வி- சட்ட நுழைவுத் தேர்வு உண்டு உறைவிட ஐந்து நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக

வளாகம் திருச்சி, 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடைபெறுகிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான TNNLU -இல் (Tamil Nadu National Law University)இல் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் பல பள்ளிகள் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி பெரும் பொருட்டு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை

பெரும் முயற்சியில் 102 மாணவர்கள் தேர்வு செய்து சென்னை பயிற்சி மையத்தில் 56 மாணவ மாணவியரும், 46 மாணவ மாணவியர் தமிழ்நாடு தேசிய சட்டக் கல்லூரி திருச்சி வளாகத்திலும் நடைபெறுகிறது.

திருச்சி மையத்தில் 35 மாணவர்கள் மற்றும் 10 மாணவர்கள் என 45 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பயிற்சி 25.11.2024 முதல் 29.11.2024 வரை உண்டு உறைவிட பயிற்சியாக நடைபெறுகிறது.

தினமும் துறையின் திட்ட ஆலோசகர் மற்றும் மண்டல உதவி இயக்குநர் தலைமையில் கண்காணிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கடலூர், திருச்சி, திருநெல்வேலி தஞ்சாவூர் கள்ளக்குறிச்சி, அரியலூர், கோவை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர் இப்பபயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

12ஆம் வகுப்பு கலைப்பிரிவு படுக்கின்ற ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர்கள் சிறந்த வழக்கறிஞர்களாக வருதல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் CLAT உண்டு உறைவிட பயிற்சிக்கு நிதி உதவி மற்றும் அனுமதி வழங்கிய மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் அவர்கள்,

மதிப்புமிகு துறையின் செயலர் அவர்கள், மதிப்புமிகு துறை இயக்குநர் அவர்கள் ஆகியோருக்கு  CLAT பயிற்சி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

திட்ட ஆலோசகர் திரு. க. ராஜா ஜெகஜீவன், மண்டல உதவி இயக்குநர் திரு. S. சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர்கள், திரு. V. மோகன், திரு. உதயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் இப்பயிற்சி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts