நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து தனக்கென ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கிய தினம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள்,

அந்நாளை சிறப்பிக்கும் வகையில் நமது இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் நாள் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று 26.11.2024 ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் அரசியலமைப்பு தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்லூரி ஆலோசகர் மற்றும் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில்
துணை முதல்வர்கள், தேர்வு நெறியாளர் மற்றும் புல முதன்மையர்கள் முன்னிலையில் துறைத் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் 200 மாணவ, மாணவியர்கள் அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் அரசியலமைப்பு தினத்தை சிறப்பிக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இணைய வழி வினாடி வினா(அரசியலமைப்பு சார்ந்து) நடத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நன்றி.

இப்படிக்கு,
ஒருங்கிணைப்பாளர்கள்,
நேசன் ஃபர்ஸ்ட் கிளப் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்,
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி ).