இன்று 29.11.2024 திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியம் இருங்கலூர் ஊராட்சியில் உள்ள கால்நடை வளர்க்கும்

விவசாயிகளுக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக கால்நடை வளர்க்கும் விவசாய குடும்ப நபர்களுக்கு இலவசமாக கால்நடை தீவனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ராபின்சன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார் சிறப்பு அழைப்பாளராக இருங்களூர் ஊராட்சி தலைவர் திரு வின்சென்ட் அவர்கள் தலைமையில் ஏற்று அவர் கூறியது,
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பின் தங்கி உள்ள ஊராட்சியில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக தீவனத்தை வழங்கிய நிறுவனத்திற்கு முதல் கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று இது போன்ற சமூகப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் எங்கள் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு இது போன்ற உதவிகள் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இதுபோன்ற காரியங்களை தொடர்ந்து எங்கள் ஊராட்சிக்கு தந்து உதவும் படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று தலைவர் அவர்கள் கூறினார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 100 விவசாயிகளுக்கு ஒரு நபருக்கு ஏழு கிலோ கால்நடை தீவனம் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 100 கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு 800 கிலோ தீவனம் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டி சார்பாக வழங்கப்பட்டது.













