தமிழ்நாடு அறிவியல் இயக்கம் &
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (கே. கே நகர் கிளை) திருச்சிராப்பள்ளி குழந்தைகள் தின விழா


01.12.2024 நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணி வரை திருச்சி கே.கே நகர் கவிபாரதி நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (கே.கே நகர் கிளை) மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (கே.கே நகர் கிளை) சார்பில் குழந்தைகள் தின விழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கே.கே நகர் கிளைத் தலைவர் திரு.ஆர்.ராஜசேகர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
முதலில் குழந்தைகளுக்கான பென்சில் பிடித்தல், எலுமிச்சை கரண்டி, லக்கி கார்னர், முறுக்கு தின்னுதல் மற்றும் பெற்றோர்களுக்கு லக்கி கார்னர் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
பரிசளிப்பு விழா தொடக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.து.காந்தி அவர்கள் அறிவியல் பாடலை பாடினார்.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மேனாள் மாவட்டத் தலைவர் பேரா.ஜூலியன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கே.கே நகர் கிளைச் செயலாளர் திருமிகு.ஜா.சுஜிதா கிரேஸி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா அவர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திருமிகு.மு.மாணிக்கத்தாய் அவர்களும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசளித்து பாராட்டுரை வழங்கினார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் திரு.சிவ.வெங்கடேஷ் அவர்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் திரு.மு.மணிகண்டன அவர்களும், கவிபாரதி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான திரு.முத்துக்குமார், திரு.மனோஜ் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கே.கே நகர் கிளைச் செயலாளர் திரு.அ.சுமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவரையும் நன்றி பாராட்டினார்.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளை கிளை நிர்வாகிகளான திரு.முத்துக்கிருஷ்ணன், திரு.ராமநாதன், திரு.சுந்தரராஜன், திரு.சந்தானராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.