திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் இணைந்து நடத்திய தேசிய வழக்கறிஞர் தின விழா இன்று 03.12.2024 நீதிமன்றத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி வி வெங்கட், பொருளாளர் கிஷோர் குமார், துணைத் தலைவர் இரா. பிரபு வரகனேரி சசிகுமார், பொன் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பிரசன்ன வெங்கடேசன், சாசன தலைவரும் வட்டார தலைவர்மான முகமது ஷபி, நிர்வாக அலுவலர் முகமது உமர் கத்தாப், இணைச் செயலாளர் சந்திரசேகர்,

சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ராஜு ஜோசப், மின்னணு செயலாளர் தேவிகா, இயக்குனர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், சமூக சேவகர் கோவிந்தசாமி, சோனா பிரசன்னா, அய்யாரப்பன் ஆகியோர்

கலந்து கொண்டு வழக்கறிஞர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
இவ்விழாவில் அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, பாலசுப்ரமணியன், முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன், வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், செந்தில்நாதன், எழிலரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












