• Home
  • தமிழ்நாடு
  • பெயர் விலாசம் தெரியாத மூதாட்டி சாலை விபத்தில்  மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
தமிழ்நாடு

பெயர் விலாசம் தெரியாத மூதாட்டி சாலை விபத்தில்  மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

Email :109

மதுரை – சென்னை பைபாஸ் சாலை டிவிஎஸ் டோல்கேட் பால இறக்கத்தில் அடையாளம் பதிவு தெரியாத வாகனம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத பெண் மீது மோதி சாலை விபத்தில் பலத்த காயப்பட்டு மேற்படி பெண் இறந்து கிடந்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்து போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு காவலர்கள் விசாரித்ததில் மேற்படிப் பெண்ணின் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை. மேற்படி நபர் பிரேதம் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோராத நிலையில் போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு

காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் லெட்சுமணன்  நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர்  முன்னிலையில் யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன்  இறுதி சடங்கு செய்து  நல்லடக்கம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts