திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி பொது பயன்பாடு அஞ்சல் தலை தொகுப்பினை காட்சிப்படுத்தி பேசுகையில், பொது பயன்பாடு அஞ்சல் தலையானது அஞ்சல் கட்டணத்தை செலுத்துவதற்கான அடையாளமாக தினசரி பயன்பாட்டிற்கு இந்திய அஞ்சல் துறையால் அதிக

எண்ணிக்கையில் வெளியிடப்படும் அஞ்சல் தலை வகையாகும். பல்வேறு மதிப்பில் வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் தலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா,
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்
ரமேஷ், மாதவன், முகமது சுபேர், சந்திரசேகரன், சிவகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.











