• Home
  • தமிழ்நாடு
  • இன்று உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு, டாஸ் அறக்கட்டளை, தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தின சேவை அறக்கட்டளை சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கில் மரம் நடும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு, டாஸ் அறக்கட்டளை, தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தின சேவை அறக்கட்டளை சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கில் மரம் நடும் விழா நடைபெற்றது.

Email :197

இன்று 03.12.2024 உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு, டாஸ் அறக்கட்டளை, தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தின சேவை அறக்கட்டளை சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கில் மரம் நடும் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் உயர்திரு.க.கண்ணன் அவர்கள் முதல் மரத்தை நட்டு விழாவை முன்னெடுத்தார். மேலும், மல்லர் கம்பம் பயிற்சியாளர் திரு. விசு அவர்கள் மரங்களை நட்டு விழாவை சிறப்பித்தார்.

மரங்கள் அண்ணா விளையாட்டு அரங்கத்திலுள்ள மல்லர் கம்பம் திடலில் நடப்பட்டது. மல்லர் கம்பம் வீரர்கள் மரங்களை வளர்ப்போம் என உறுதியளித்துள்ளனர்.
டாஸ் அமைப்பு சார்பாக, திரு.மகேந்திரன் ( மாற்றுத்திறனாளி தேசிய தடகள வீரர்) மற்றும் திரு.பாலகிருஷ்ணன் (மரம் வளர்ப்பு பிரிவின் பொறுப்பாளர்) அவர்களும், திரு.சிவப்பிரகாசம் நிறுவனர் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் மற்றும் தின சேவை அறக்கட்டளை, அவர்களும் திரு.கதிரேசன் செயலாளர் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தின சேவை அறக்கட்டளை அவர்களும் விழாவை முன்னின்று நடத்தினர்.
மரங்கள் – தென்னை மற்றும் மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts