• Home
  • தமிழ்நாடு
  • இன்று காலை திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் “வினாடி வினா” போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று காலை திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் “வினாடி வினா” போட்டி நடைபெற்றது.

Email :298

            “தேசிய நூலக வார விழா”
நவம்பர் 14 முதல் 20 முடிய நடைபெற உள்ள 57ஆவது தேசிய நூலக வார விழா! திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டத்துடன் இணைந்து

பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளன.


இன்று 19.11.2024 காலை மாவட்ட மைய நூலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு “மாபெரும் வினாடி வினா” போட்டி நடைபெற்றது. இதில் பல கல்லூரியிலிருந்து இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். வினாடி வினா நிகழ்ச்சியை NR IAS அகாடமி இயக்குனர் திரு. என். ஆர். விஜயாலயன் நடத்தினார்.


நாளை 20ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு வாசகர்களுக்கு “வாசிப்பு என்ன செய்யும்” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறும்.

இதில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதையை 5 நிமிடங்களுக்குள் வாசிக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் நிறைவு விழாவில் வழங்கப்படும். அனைத்து நிகழ்வுகளிலும் திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட நூலக அலுவலர்,
திருச்சிராப்பள்ளி.
94435 32633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts