• Home
  • தமிழ்நாடு
  • உலக எய்ட்ஸ் கூட்ட அறிக்கை நேற்று புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு  நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து உலக எய்ட்ஸ் தின விழாவினை கொண்டாடியது.
தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் கூட்ட அறிக்கை நேற்று புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு  நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து உலக எய்ட்ஸ் தின விழாவினை கொண்டாடியது.

Email :116

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி,

உலக எய்ட்ஸ் கூட்ட அறிக்கை நேற்று
05.12.2024 புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து உலக எய்ட்ஸ் தின வினாவினை கொண்டாடியது.

இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கே. பாக்கியவாசன் அவர்கள் எச். ஐ. வி யை ஒழிப்பதற்கான கல்வி வழி அதிகாரம் என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றினார். அப்போது எச். ஐ. வி நோய் உருவாக காரணம் என்னவென்பதை யும் எச். ஐ. வி நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் முறையினையும் கல்வி வழி எச். ஐ. வி யை ஒழிக்கும் முறையினைப் பற்றியும்

மாணவிகள் புரிந்து கொள்ளும் விதத்தில் பயனுள்ள கருத்துக்களை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில், கல்லுரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வானது இனிதே நடந்தேறியது.

கல்லுாரியின் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாதார துறை பேராசிரியர் முனைவர். பி மெர்லின் கோகிலா அவர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இளங்கலை இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts