தமிழ்நாடு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!

Email :109

  திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது ஷபி தலைமை வகித்தார்.

சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முடக்குனர் மெர்லின் கோகிலா, அரிமா ஹேமலதா, ஆசிரியை பொன்னரிசி மேரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் கதிரேசன், துணைச் செயலர் சந்திரசேகரன்,  மக்கள் தொடர்பாளர் கண்ணன் உட்பட பலரை சிறப்பு செய்து பேசுகையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சமூகம் மற்றும் வளர்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாள். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை

வலுப்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளைக் கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனால் அவர்கள் மற்றவர்களுடன் சமூகத்தில் முழுமையாகவும், சமமாகவும், திறம்பட பங்கேற்கவும் முடியும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts