பள்ளிகள் தென்றல் உலாவும் பூஞ்சோலையாய் அறிவுச் சோலையாய் விளங்குதல் வேண்டும்!

ஆசிரியர் பெருமக்கள் உளவியலில் தெளிந்தவராகவும் தம் பணியையும் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்தவராகவும் விளங்குதல் வேண்டும். உணர்ச்சிவயப்படாதவராகவும் காலத்துக்கேற்ற அறிவாண்மை உடையவராகவும் விளங்குவதுடன் பள்ளியில் ஒருவருக்கு ஒருவர் துணைநின்று

பணிகளைத் தவிர்த்துவிடாமல் ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு துறையிலும் தம் அறிவாற்றலையும் திறனையும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என ஊல்சு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்க்கு வழங்கப்பட்ட பணித்திறப் பட்டரையில் நான் விளக்கம் செய்தேன்.

கடந்த 19.11.2024 ஆம் நாள் சோகூர் ஊல்சு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டரையினை நடத்தினேன். காலையில் மாணவர்க்கும் மாலையில் ஆசிரியர்க்கும் இப்பட்டரை நடத்தப்பெற்றது.

இப்பட்டரையில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிழ்த்திரு முத்து அவர்கள் சிறப்பு வருகையளித்து நினைவுப் பரிசினை வழங்கினார். தலைமையாசிரியர் திருமதி ஆனந்தி அவர்கள் பட்டரைக்குத் தலைமை தாங்கினார்.
இரா. திருமாவளவன்












