தமிழ்நாடு

கல்வி செம்மல் விருது -2025!

Email :2313

கல்வி செம்மல் விருது -2025,
பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன் அவர்களின் 27 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியர் பணியினை பாராட்டி கோவை முத்தரையர் நலசங்கத்தின் சார்பாக ” கல்வி செம்மல் விருது-2025″  எனும் விருதினை முன்னால் அமைச்சர் திரு கு.ப.கிருஸ்ணன் அவர்கள் வழங்கினார்கள். விருதாளர் பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன் அவர்கள் 1998 முதல் 2025 வரை 27 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.

பேராசிரியர் அவர்கள் ஆசிரியர் பணியோடு கீழ்கண்ட சேவைப்பணிகளையும் செய்து வருகிறார்.
தொல்லியல் மேற்பரப்பு ஆய்வாளர், இதழாசிரியர், இலக்கியம், வரலாறு, நிர்வாகவியல் மற்றும்  ஆன்மீக சொற்பழிவு,  கருத்தரங்கம் மற்றும்  பட்டிமன்றப் பேச்சாளர், அகஸ்தியர் நூலகம் என்கிற பதிப்பகம் மூலமாக பதிப்பாசிரியராகவும், எழுத்தாளராகவும், நூலாசியராகவும் தொண்டு செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர், திருவாசி அருகே உள்ள மான்பிடிமங்கலம் எனும் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரின் பாட்டன் தெய்வத்திரு புங்கான் முத்துராஜா எனும் காவல்காரன். இவரின் தாத்தா பெயர் தெய்வத்திருவாளர்கள் பு.பெரியசாமி முத்துராஜா – மீனாட்சி ,பெற்றோர் பெயர் தெய்வத்திருவாளர்கள் பெ.மீனாட்சிசுந்தரம் முத்துராஜா- சரோஜா அம்மையார். தொடக்க கல்வி தஞ்சாவூர் மாவட்டம்,கச்சமங்கலம் கிராமத்திலும்,  உயர்நிலைக் கல்வி  மேகளத்தூர் மற்றும் இளங்காடு கிராமத்திலும், மேல்நிலைக்கல்வி திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இளங்கலை  (BCom)முதுகலை (MCom) கல்வி தந்தை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியிலும், Mphil திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியிலும், MBA சேலம் பெரியார் பல்கலைக்  கழகத்திலும் பயின்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “உழவர் சந்தை “திட்டத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் 2006 ஆம் ஆண்டு பெற்றார்.
2009 ஆம் ஆண்டு திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் கலைக்கல்லூரி முதல்வராக பணியேற்றார். இளம் வயதில் (36) வயதில் கல்லூரி முதல்வராக பணியேற்றவர் இவரே. தற்போது தனலட்சுமி சீனிவாசன் கலைக்கல்லூரி மேலாண்மைத் துறை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
1998 ல் திருச்சி,புத்தனாம்பட்டி  நேரு நினைவுக்கல்லூரியில் முதன் முதலாக விரிவுரையாளராக பணியேற்றார்.
வணிக மற்றும் மேலாண்மைத் துறையில், தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வு இதழ்களில் 70க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். 150க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர். முதுகலை ஆய்வு, ஆய்வு நிறைஞர், முனைவர் என எண்ணற்ற ஆய்வு மாணவர்களுக்கு தக்கதொரு நெறியாளராக விளங்கியுள்ளார்.
இவர் எழுதிய நூல்கள்:
Organaization Behaviour
Partnership Accounts
Business Law
Banking Theory
மனித வள மேம்பாடு

முத்தரையர் கல்வெட்டுகள்
சப்த கன்னியர்கள்
தமிழ் இலக்கிய வழியில் மேலாண்மைச் சிந்தனைகள் மெய்க்கீர்த்தி சக்ரவர்த்தி கரிகாலன் மன்னர் திருமங்கை ஆழ்வார்
முத்தரையர் குல வலையர் வரலாற்றில் வளரி The Glory of Mutharaiyar Dynasty in India
முத்தரையர் பேரரசு, முத்தரையர் பேரரசு வரலாற்றில் குடைவரை கோயில்கள்,
நிர்வாகவியலில் சோழப்பேரரசு
நிர்வாகவியலில் சேரப்பேரரசு
நிர்வாகவியலில் பாண்டியப்பேரரசு
முத்தரையர் சாம்ராஜ்ஜியம்,
காவல்காரன் என இதுவரை 20 நூல்களை எழுதியுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக, ‘குரு வலையொளி’யின் (யூ ட்யூப் சேனல்) நிர்வாக இயக்கராகவும், ‘அரையர் சுவரன் மாறன் பிடாரி’ அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலராக, ‘ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின்’ மாநில ஆலோசகராக சமூகப் பணியாற்றுவதோடு, ‘மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளை’ ஒன்றை நிறுவி, அதன் பொருளாளராகவும் சேவையாற்றியவர். முத்தரையர் இலக்கிய வட்டம் எனும் இலக்கிய அமைபினை அமைத்து அதன் அமைப்பாளராகவும் இலக்கிய பணியாற்றிவருகிறார். பன்னிரண்டுக்கும்  மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராகவும் இருந்து முனைவர் பட்டம் பெற துணை புரிந்துள்ளார். இவ்விழா 10-8-2025 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று ,கோவை மாநகரத்தில், இடையர்பாளையம், ஜோதிமணி பொன்னையா திருமண மண்டத்தில் கோவை முத்தரையர் நல சங்கத்தின் 23 ம் ஆண்டு முத்தரையர் கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் பொதுத்தேரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.கல்வித்துறையில் சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞர் அணித்தலைவர் திரு  ஆர்.வி.பரதன்  மற்றும் மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு பெரியபுள்ளான் மற்றும் சமுதாய முன்னோடிகள் பரிசுகளை வழங்கினார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை முத்தரையர் நல சங்கத்தின் தலைவர் P .L.ராஜேந்திரன்,பொதுச்செயலாளர் திரு த.மகாதேவன் , பொருளாளர் திரு S.கருணாகரன் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts