• Home
  • தமிழ்நாடு
  • மாணவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று துணிப்பை விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், புத்தக வாசிப்புடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

மாணவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று துணிப்பை விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், புத்தக வாசிப்புடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

Email :38

தண்ணீரை அமைப்பு சார்பில் 2026ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளில் பொன்மலைப்பட்டி மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று துணிப்பை விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், புத்தக வாசிப்புடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

வளரும் இளைய தலைமுறையினரிடம் புவி பந்தைக் காத்திட நெகிழிப்பையைத் தவிர்த்து துணிப்பை கையில் எடுக்க வேண்டும் என்ற  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிறந்துள்ள புத்தாண்டில் ஒவ்வொரு மாணவர்களும் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் ,பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும், காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பூமி பந்தைக் காத்திட நெகிழிப்பை தவிர்த்து துணிப்பையை கையில் எடுக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புவி வாழ்வதற்கான ஒரே ஆதாரம் எனவே அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் அடுத்த தலைமுறைக்கும் அவற்றை பசுமை பரப்போடு வழங்க வேண்டும் அதற்கு மரக்கன்றுகளை அதிகமாக நட்டு வளர்க்க வேண்டும்

புத்தாண்டு முதல் வீட்டின் பயன்பாட்டில் தனி மனிதர்களும் பொதுவெளியிலும் துணிப்பைகளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கடைவீதிக்கு செல்லும் பொழுது பொருட்கள் வாங்கும் பொழுதும் இறைச்சி வாங்கும் பொழுதும் செல்லும் இடங்களில் எல்லாம், உணவு கடைக்கு செல்லும் பொழுதும் துணிப்பையை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் பாத்திரங்கள் கையில் எடுத்துச் செல்ல வேண்டும் நெகிழிப்பை தவிர்க்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அத்துடன் வாசிப்பு பழக்கத்தை வளரும் தலைமுறை தொடர வேண்டும் என்பதற்காக அனைத்து மாணவர்களுக்கும் நூல் வழங்கப்பட்டது வாசிப்புடன் புத்தாண்டு, சூழலைப்பாதுகாக்க வேண்டும் என்று புத்தாண்டு, பசுமை பரப்பை  அதிரிக்க வேண்டும் என்ற புத்தாண்டு, பூமிப்பந்தை பேணி காக்க வேண்டும் என்ற உறுதி மொழியோடு புத்தாண்டு கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்விற்கு தண்ணீர் அமைப்பபு செயல் தலைவர் திரு கே .சி .நீலமேகம் தலைமை வகித்தார்.
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் முன்னிலை வகித்து உறுதி மொழியை மாணவரிடம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள், நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் சிலம்பம் மன்னை மகாலிங்கம் சிலம்பம் ஆசான் பிரேம் குமார், சிலம்ப மாணவர்கள், தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனை சுகித்தா மற்றும் சுஜித் சிலம்பம் இளையோர உள்ளிட்டோர் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கே.சி.நீலமேகம்,
செயல்தலைவர்,
தண்ணீர் அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts